மணிரத்னத்திடம் சிக்கிய விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி இயக்குனர் மணிரத்னம் படத்தில் நடிக்க இருக்கிறர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தொடக்கம் முதல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து, இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா படத்திலும் அவரின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.  ஆனாலும், ஷங்கர், மணிரத்னம், பாலா, முருகதாஸ் உள்ளிட்ட பெரிய இயக்குனர்கள் படத்தில் அவர் இதுவரை நடித்ததில்லை. இந்நிலையில் அவர் மணிரத்னம் படத்தில் நடிக்க  இருக்கிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதியின் கால்ஷீட் இன்னும் சில வருடங்களுக்கு ஃபுல்லாக இருக்கிறது. இருந்தாலும், மணிரத்னம் படம் என்பதால், அவர் சில தேதிகளை அட்ஜெஸ்ட் செய்து அவரின் படத்தில் நடிப்பார் எனத் தெரிகிறது.

அப்படி அவர்கள் இருவரும் இணைந்தால், அது சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை…