சூப்பர் ஸ்டார் தற்போது தீவிர அரசியலில் களம் இறங்கிய பிறகு புதிய படத்தில் நடிக்க உள்ள தகவல் வெளியாகியது. அவா் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாகவும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது என்ற தகவல் நாம் அறிந்ததே. இந்நிலையில் அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாகவும் அதுவும் அவா் ரஜினிக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

இதையும் படிங்க பாஸ்-  ஒரே கட்சியில் ரஜினி, கமல், அஜித், விஜய்: எஸ்.வி.சேகர் ஆலோசனை

புதிய தகவல் என்னவென்றால் விஜய் சேதுபதி ரஜினிக்கு தம்பியாக நடிப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ரஜினி இயக்குநா் பா.ரஞஞ்சித் இயக்கத்தில் காலா படத்திலும் மற்றும் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்திருப்பதை அடுத்து இந்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் முதன் முதலாக ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தின் புதிய அப்டேட்!

விஜய் சேதுபதி ஏற்கனவே பீட்சா, இறைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் விஜய்சேதுபதி இந்த படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்கிறாராம். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகா், நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞா்கள் பற்றி விபரம் இன்னும் வெளிவரவில்லை.