நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனருக்கு கை கொடுக்கும் விஜய் சேதுபதி

வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்துவருபவர் விஜய் சேதுபதி. இவரது இந்த வளர்ச்சிக்கு உதவிய படங்களில் முக்கியமானது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

அறிமுக இயக்குனரான தரணிதரன் இயக்கிய இந்த படம் மிகக்குறைந்த பட்ஜெட்டில் தயாரானது. ஆனால் வசூலில் நல்ல லாபத்தை கொடுத்தது. தரணிதரன் தற்போது ஜெயராம் மகன் காளிதாஸ் நடிப்பில் ஒரு பக்க கதை என்ற படத்தை இயக்கினார்.

ஆனால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவதை அடுத்து அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார் தரணிதரன். தனது முதல்பட ஹீரோவான விஜய் சேதுபதியை வைத்தே ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு சீதகாதி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைகளத்துடன் தயாராக உள்ள இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.