நயன்தாராவின் கணவர் ஆகிவிட்டார் விஜய்சேதுபதி

நடிகை நயன்தாராவின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமான ‘இமைக்கா நொடிகள்’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒருசில தினங்களில் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தில் நயன்தாராவுக்கு கணவராக விஜய்சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சிபிஐ அதிகாரியாக நடித்திருக்கும் நயன்தாராவின் கணவராக விஜய்சேதுபதி நடித்திருப்பதாகவும், மிகவும் பயந்த சுபாவமுள்ள அவரை வில்லன்கள் கொலை செய்துவிடுவார்கள் என்றும் கொலைகாரர்களை நயன்தாரா எப்படி பழிவாங்கினார் என்பது தான் இந்த படத்தின் மெயின்கதை என்றும் கூறப்படுகிறது.

விஜய்சேதுபதி பல படங்களில் நட்புக்காக சிறப்பு தோற்றங்களில் நடித்து கொடுத்திருந்தாலும் இந்த கேரக்டர் தான் இதுவரை நடித்திராத கேரக்டர் என்றும் வித்தியாசமான இந்த கேரக்டருக்காக ஒருசில காட்சிகள் மட்டுமே வரும் கேரக்டர் என்று தெரிந்தும் நடிக்க ஓப்புக்கொண்டதாக கூறியுள்ளார்.