தமிழ்திரையுலகில் யாருடைய உதவியும் இன்றி தன்னுடைய உழைப்பின் மூலமே முன்னுகு வந்த நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து கொண்டிருக்கும் விஜய்சேதுபதி தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாகவும், ரஜினி தம்பியாக நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்து வருகின்றது.

இந்த நிலையில் அவர் தற்போது ஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடித்து வருகிறார். அதாவது ரஜினிகாந்த் மட்டுமின்றி சயீரா நரசிம்ம ரெட்டி என்ற படத்திலும் விஜய்சேதுபதி நடித்து வருகிறார். இந்த படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.