கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘இறைவி’ படத்தில் விஜய்சேதுபதி மற்றும் அஞ்சலி ஜோடியாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்ற நிலையில் தற்போது இந்த ஜோடி மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் மூன்றாவது முறையாக விஜய்சேதுபதி படத்தை இயக்கவுள்ளார். கே புரடொக்சன்ஸ் ராஜராஜன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும், யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

தென்காசி மற்றும் மலேசியாவில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.