நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வரும் காதல் திரைப்படமான 96 படத்தின் டிரைலர் யூடியூப்பில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்த படத்தில் ராம் என்ற பெயரில் விஜய் சேதுபதியும், ஜானு என்ற பெயரில் திரிஷாவும் நடிக்கின்றனர். பள்ளிப்பருவத்தில் மலர்ந்த காதல் இடையில் பிரிந்து பின்னர் நண்பரின் திருமண விழாவில் மீண்டும் சந்தித்து காதலை புதுப்பித்துக்கொள்வது போல காட்சிகள் உள்ளன. பள்ளிப்பருவத்தில் வரும் காதல் 1996-ஆம் ஆண்டு நடைபெற்றது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால் படத்தின் தலைப்பு 96 என வைக்கப்பட்டிருக்கலாம்.

கோவிந்த் வசந்தா இந்த படத்துக்கு இடை அமைத்திருக்கிறார். டிரைலரின் முடிவில் காதலே வாழ்வின் நீளம் என இசைக்கப்படுவது மனதை மூழ்கடிக்கிறது. விஜய் சேதுபதி, த்ரிஷா, ஜனகராஜ், காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கியுள்ளார்.