கருப்பன் பட விழா – ஓ.பி.எஸ்-ஐ கிண்டலடித்த விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடித்துள்ள கருப்பன் படம் தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது.

ரேனிகுண்டா பட இயக்குனர் பன்னீர் செல்வம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிருந்தாவனம், பலே வெள்ளையத்தேவா ஆகிய படங்களில் நடித்த நடிகை தன்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஜய் சேதுபதி ‘ இப்படத்திற்காக நான் மூன்று பேருக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். முதலில் பன்னீர் செல்வம், இரண்டாது பன்னீர் செல்வம், மூன்றாவதும் பன்னீர் செல்வம் என மூன்று முறையும் அவரின் பெயரையே கூறினார்.

அதன் பின் அவர்களிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களில் ஒருவர்  “பன்னீர் செல்வத்திற்கு மூன்று முறை நன்றி கூறினீர்கள். அரசியலுக்கு வர வேண்டும் என ஆசை உள்ளதா?” எனக் கேட்டார். அதற்கு சிரித்துக்கொண்டே பதிலளித்த விஜய் சேதுபதி “ நான் கூறியது இந்த பன்னீர் செல்வத்தை. இவர் சமாதியிலெல்லாம் சென்று உட்கார மாட்டார் என நினைக்கிறேன்’ என கிண்டலாக பதிலளித்தார்.