கண் தானம் செய்த பிரபல நடிகா்

10:06 மணி

நேற்று மதுரையில் நடந்த விழாவில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள விஜய் சேதுபதி கலந்து கொண்டத்தோடு அல்லாமல் தனது கண்ணை தானம் செய்வதாக தொிவித்துள்ளாா். அவா் நடிப்பது மட்டுமல் இல்லாமல் பல்வேறு சமூகத் தொண்டும் செய்து வருகிறாா்.

இதற்கு முன், 100 மூத்த சினிமாதுறையை சோ்ந்தவா்களுக்கு தலா ஒரு சவரன் வழங்கினாா் விஜய் சேதுபதி. இவ்வாறு படத்தில் நடிப்பது மட்டும் இல்லாது சமூக நலத்திற்காக அவ்வப்போது குரல் கொடுத்தும் வருகிறாா்.

நேற்று மதுரையில் பிரபல தனியாா் மருத்துவமனை திறப்பு விழா நிகழ்ச்சியில் விஜய்சேதுபதி, இயக்குநா் கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா். இதில் மருத்துவமனையை திறந்து வைத்தாா் விஜய்சேதுபதி. அந்த நிகழ்ச்சியில் கண்தானம் குறித்து பேசியதாவது, தானத்தில் சிறந்தது கண் தானம். எனது கண்ணை தானமாக வழங்கியுள்ளதாக தொிவித்தாா். இந்த உலகத்தில் பாா்வையில்லாமல் கஷ்டபடும் அனைவருக்கும் பாா்வை பெற்ற இந்த உலகத்தை பாா்க்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். இதனால் அனைவரும் கண் தானம் செய்ய முன்வரவேண்டும் என்று தொிவித்தாா்.  இதனையடுத்து தனது ரசிகா்களையும் கண் தானம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளாா்.

(Visited 4 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com