விஜய் சேதுபதி சமீபத்தில் ஒரு தனியார் வானொலிக்கு இயல்பாக ஜாலியாக பேட்டி அளித்துள்ளார் .அதில் தோல்வி படம் கொடுத்த இயக்குனரின் பல படங்களில் மீண்டும் நடிப்பது ஏன் குறிப்பாக பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இணைந்த இயக்குனரோடு மீண்டும் சேதுபதியில் இணைந்தது ஏன் என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி ஒருவரின் மேக்கிங் திறமையைத்தான் மதிப்பிட முடியும் ஏதாவது ஒரு காரணத்தால் அவர் படம் வெற்றி அடையாமல் போகிறது.

சரி இந்த படம் பிடிக்கலையா உங்களுக்கேத்த மாதிரி வேற படம் பண்ணலாம்னு அதுக்கு ஏத்த பிலிம் மேக்கிங் உடனே பண்ணிடுறாங்களே அந்த திறமைக்காகத்தான் என பதில் அளித்துள்ளார்.

அது போல விக்ரம் வேதாவில் நடிக்கும்போது அதில் நடிக்க வேண்டாம் அந்த டைரக்டர்கள் பல வருசம் படம் இல்லாம இருக்காங்கன்னு அறிவுரை வந்தது. அவங்க நல்ல பிலிம் மேக்கர்சுன்னு தெரிஞ்சுதான் பண்ணேன் . அறிவுரை கொடுத்தவங்களே மாஸ்னு சொன்னாங்க ஒருத்தர் பிலிம் மேக்கிங் மேல நம்பிக்கை வைக்கணும் என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.