தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. சினிமாவில்துணை நடிகராக ஆரம்பித்த இவர் வாழ்க்கை பயணம் இன்று சினிமாவில் பல திறமையான பல வேடங்களை செய்யும் அளவு முன்னணி நடிகராக உயர்ந்தார்.

தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய், மேற்கு தொடர்ச்சி மலை, ஜூங்கா படங்களை தயாரித்ததன் மூலம் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து விட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம் சாலையில் உள்ள நடிகர் விஜய் சேதுபதிக்கு சொந்தமான அப்பார்ட்மென்டில்  வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வருமான வரி விஷயமாக அதிகாரிகள் வந்து ரெய்டு நடத்துகின்றனரோ என பலர் நினைத்திருக்க, சில நாட்கள் முன் விஜய் சேதுபதி வருமான வரி தாக்கல் செய்யும்போது சில ஆவணங்களை கொடுக்க மறந்து விட்டாராம் அதை வாங்குவதற்க்குதான் வருமான வரித்துறை அதிகாரிகள் வந்ததாக கூறப்படுகிறது.