சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தை இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார் என்பதும், இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் முதல் தொடங்கவுள்ள நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மூன்று படங்களில் நடித்த விஜய்சேதுபதி இந்த படத்திலும் நடிப்பார் என்று கூறப்படுகிறது குறிப்பாக அவர் ரஜினிக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே விஜய்சேதுபதி வில்லனாக நடித்த ‘விக்ரம் வேதா; திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதாலும், ரஜினிக்கு வில்லனாக நடிப்பதே ஒரு பெருமை என்பதாலும் அவர் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.