vijay sethupathi

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலக்குமாரா படத்தை இயக்கிய கோகுல் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் அடுத்த படம் தான் ஜூங்கா. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். இவர் இரண்டாவது முறையாக விஜய்சேதுபதியுடன் இணைந்திருக்கும் படம் ஜூங்கா. அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ளது இந்த படம். இது வருகிற 27ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளது படக்குழு.

சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜூங்கா படக்குழுவினர் பங்கேற்றனர். அதில் கலந்துக்கொண்ட விஜய் சேதுபதி, அரசியல் கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ரெடியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதுவரை விஜய் சேதுபதி டான் போன்ற கதாபாத்திரத்திலும், போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். வருங்காலங்களில் அரசியலை மையமாக வைத்து கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க தயார் என தெரிவித்துள்ளார்.