சூப்பர் டீலக்ஸான விஜய் சேதுபதி

ஒவ்வொரு நடிகருக்கும் பெண் வேடத்தில் நடிப்பது என்பது விருப்பமாக  இருக்கும். ரஜினி பணக்காரன் படத்திலும்,கமல் அவ்வை சண்முகியிலும்,பிரசாந்த் ஆணழகன் படத்திலும் நடித்திருந்தனர். தற்போதைய ஹீரோக்களில் சிவகார்த்திகேயன் ரெமோ படத்தில் பெண் வேடத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் விஜய் சேதுபதியும்  அந்த லிஸ்டில் சேர்ந்துள்ளார்.சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் அவர் பெண் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.