விஜய் சேதுபதி நடிக்க பாலாஜி தரணிதரன் இயக்கும் புதிய படம் சீதக்காதி இந்த படத்தில் 80 வயது முதியவராக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்காக ஹாலிவுட்டில் இருந்து சிறப்பு கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு விஜய் சேதுபதியின் முகத்தை முற்றிலும் மாறுபட்ட விதத்தில் மாற்றியமைத்துள்ளனர்.

இது குறித்து விஜய் சேதுபதி கூறியது, இது சிவாஜி சாரோ கமல் சாரோ நடிக்க வேண்டிய படம் பாலாஜிதரணிதரன் வேறு சில நடிகர்களையும் மனதில் கற்பனை செய்து வைத்திருந்திருக்கிறார் அவர்களாலும் சில சூழ்நிலைகளால் முடியவில்லையாதலால் அவர் என்னை நாடினார்.

இதில் 80 வயது நாடக கலைஞனாக நடித்துள்ளேன் என்றார். இதனை மேக்கிங் ஆஃப் அய்யா என்ற பெயரில் படக்குழுவினர் வீடியோ மற்றும் புகைப்படமாக வெளியிட்டு உள்ளனர்.