செக்க சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி நான் தீபிகா படுகோனை கல்யாணம் பண்ணிக்க போறேன் என கூறியிருக்கும் வசனம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய்சேதுபதி, அரவிந்தசாமி, அருண்விஜய், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா, அதிதிராவ், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்திருக்கும் படம் தான் செக்க சிவந்த வானம்.
இந்த படத்தின் இரு டிரைலர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் 27ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் அந்த படத்தில் நடித்திருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, படத்தின் ஸ்நீக் பீக்கை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில்  விஜய் சேதுபதியை ஒரு பாட்டி  குடிச்சிட்டு வந்துருக்கீங்களா? எனக் கேட்கிறார். அதற்கு விஜய் சேதுபதி என் தாத்தா  நான் சஸ்பெண்ட் ஆகுற டைம வீணாக்கக்கூடாதுன்னு  எனக்கும் தீபிகா படுகோனுக்கும் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணி இருக்கிறார் பாம்பே பாம்பே என சொல்கிறார். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  விஜய் சேதுபதி ஒரு மகா நடிகன் - இப்படி பாராட்டிட்டாரே ரஜினி!