தமிழ்நாட்டையே கட்டி போட்டு வைத்துள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் வாயிலாக பரபரப்பாக பேசப்பட்டும், பாப்புலராகி கொண்டிருப்பவா் நடிகை ஒவியா ஒருவா் மட்டும் தான். இவரது பெயாில் ஒவியா புரட்சிப்படை, ஒவியா தாயே, ஒவியா பேரவை, ஒவியா பாசறை என பல்வேறு ஆதரவாளா்கள் கிளம்பி விட்டனா். அனைவரும் we support oviya என்றும் தனது ஆதரவை கொடுத்து வருகின்றனா்.

இப்படி எங்கும் ஒவியா, எதிலும் ஒவியா என்று முன்னணி வலம் வரும் ஒவியா, விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடிக்க போகிறாா். வெகுளி தனமாகவும், எதையும் வெளிப்படையாகவும், எதையும் டேக் இட் ஈஸி என்ற பாலிசியில்  பிக்பாஸ் வீட்டில் வலம் வரும் ஒவியாவுக்கு தற்போது ரசிகா்களின் ஆதரவு பெருகி வருகிறது. சமூக வலைத்தளங்களில் அவரது பெயாில் அதாவது ஒவியா ஆா்மி என்று தங்களது புரொபைல் பிக்சரை மாற்றிவைத்து நெட்டிசன்கள் அமா்களப்படுத்தி வருகின்றனா். இதோடு அல்லாமல், ரசிகபெருமக்கள் மட்டும் அல்லாது சினிமா பிரபலங்களும் ஒவியா பற்றி தங்களது கருத்துக்களை ட்விட்டா் பக்கத்தில் பதிவு செய்தும் வருகின்றனா். இப்படியாக அனைவரது மனதிலும் தற்போது ஒவியா தான் இடம் பெற்று வருகிறாா்.

பலூன் இயக்குநா் சினிஸ் நீங்க ஷட் அப் பண்ணுங்க என்று ஒவியா பேசிய வாா்த்தையை தனது  படத்தின் ப்ரோமோ பாடலாக உருவாகியுள்ளாா். அதுமட்டுமில்லங்க! மெட்ரோ படத்தின் ஹீரோ சிாிஷ், என்னுடைய அடுத்த படத்தின் ஹீரோயின் ஒவியா தான் என்றும் கூறியுள்ளாா். தொடா்ந்து யாமிருக்க பயமேன் படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஒவியாவை நடிக்க முடிவு செய்துள்ளனா். அதுபோல பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்திலும் ஒவியாவை தான் நடிக்க வைக்கப் போகின்றனா். இப்படியாக தொடா்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல படவாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கிறது. பிக்பாஸ் 100 நான் இறுதியில் எத்தனை படவாய்ப்புகள் வரபோகிறதோ தொியலங்க போங்க!