இந்த முறை வெளிநாட்டு ஸ்டைலீஷ் டானாக விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தற்போது நடித்து வரும் படம் ஜூங்கா. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி டான் வேடத்தில் நடிக்கிறார். ஆனால் இதில் வெளி நாட்டில் வாழும் ஸ்டைல் டான் கேரக்டர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில்  நடைபெற உள்ளது. எனவே படக்குழு விரைவில் பாரிஸ் பறக்கிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இவர் இதற்குதான்  ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.