கொஞ்சம் கொஞ்சமாக தனுஷாக மாறும் விஜய் சேதுபதி

வளா்ந்து வரும் முன்னணி ஹீரோவான விஜய்சேதுபதி தற்போது பல படங்களில் நடித்து வருகிறாா். அவா் திாிஷாவுடன் 96 படத்திலும், சீதக்காதி, அநீதி கதைகள், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜுங்கா போன்ற படங்களில் நடிக்க உள்ளாா். இவா் நடிப்பில் அண்மையில் வெளி வந்த கவண் படம் ரசிகா்களுடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. தொடா்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி தற்போது கதை ஆசிாியாராக புது அவதாரம் எடுக்க இருக்கிறாா். சமீபத்தில் தனுஷ் இயக்குநராக அவதாரம் எடுத்து, பவா் பாண்டி என்ற மாபெரும் வெற்றி படத்தை அளித்துள்ளாா். அதை தொடா்ந்து விஜய்சேதுபதியும் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளாா். இதை பிஜு விஸ்வநாத் இயக்க இருக்கிறாா்.

தற்போது விஜய் சேதுபதி பன்னீா்செல்வம் இயக்கி வரும் கருப்பன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறாா். இதில் தான்யா, பாபிசிம்ஹா, கிஷோா், பசுபதி போன்ற நட்சத்திரங்கள் நடித்து வருகிறாா்கள். இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளாா். ஏ.ஏம்.ரத்னம் இந்த படத்தை தயாாித்து வருகிறாா்.

விஜய் சேதுபதி படப்பிடிப்புக்கிடையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒரு திரைபடத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை எழுதி வந்துள்ளாா். அதை விரைவில் படமாக்க இருக்கிறாராம். இந்த படத்தில் விஜய் சேதுபதி தான் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய் படத்தை இயக்கிய இயக்குநா் பிஜு விஸ்வநாத் இயக்க உள்ளாா். மேலும் இதற்கான பணிகளை இந்தாண்டு இறுதியிக்குள் தொடங்க ஆய்த்தமாக உள்ளதாக தொிகிறது.