அசுரன் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியான செய்தியை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

வடசென்னை  படத்தைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும்  அசுரன்  படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படம் எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை என்ற நாவலைத் தழுவி உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் கோவில்பட்டி சுற்றுவட்டாரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க பாஸ்-  அடேங்கப்பா!! கஜா புயலுக்கு விஜய் சேதுபதி இத்தன லட்சத்த குடுத்தாரா...

இந்த படத்தில் தனுஷுடன், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டவர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துள்ள நிலையில் விஜய் சேதுபதி முக்கியமான ஒருக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க பாஸ்-  தனுசின் ஹாலிவுட் பட டீசா் வெளியீடு

ஆனால் இதை அசுரன் படக்குழு மறுத்துள்ளது. மேலும் அதுபோன்ற ஒருப் பேச்சுவார்த்தைக் கூட நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே விஜய் சேதுபதி வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான வடசென்னை படத்திலும் நடிப்பதாக ஒப்பந்தம் ஆகி பின்னர் அதிலிருந்து வெளியானார் என்பது குறிப்பிடத்தக்கது.