அஜீத் பிறந்தநாளை பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி

நேற்று அஜீத்தின்46வது பிறந்தநாள். தல ரசிகர்கள் தமிழகமெங்கும் கோலாகலமாக கொண்டாடினர். சமூகவலைதளங்களில் எங்கு பார்த்தாலும் அஜீத் வாழ்த்து செய்தியாகவே இருந்தது. பல இடங்களில் ஏழை மக்களுக்கு உதவிகள் வழங்கியும்,உணவு வழங்கியும் கொண்டாடினார்கள். ஆனால் இந்த செய்திகள் அனைத்தும் சில மணி நேரங்களே நீடித்தன. காரணம் விஜய் சேதுபதி.

சென்னையில் நேற்று உலகாயுதா என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. சினிமா சங்கள் சார்பாக நடத்தப்பட்ட இந்த விழாவில் விஜய் சேதுபதி முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார்.விழாவில் சினிமா சங்கங்களை சார்ந்த பலருக்கு தலா 1 பவுன் வீதம் 100 பவுன்களை தனது சொந்த பணத்திலிருந்து வழங்கினார் விஜய் சேதுபதி.

இந்த விழா குறித்தும், விழாவில் அவரது பேச்சு குறித்தும் சமூக வலைதளங்களில் அஜீத் செய்திகளை பின்னுக்கு தள்ளி முன்னனியில் இருந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஜீத் பிறந்த நாள் குறித்த செய்திகள் டல்லடித்தன. ஆனாலும் முன் ஜாக்கிரதையாக விஜய் சேதுபதி அஜீத்திற்கு டுவிட்டரில் வாழ்த்தினை தெரிவித்திருந்தார்.