நீயா நானாவில் அசத்திய விஜய் சேதுபதி !

சமீபக்காலமாக முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்ட விஜய் சேதுபதிக்கு, முக்கிய அடையாளமே அவரது அருமையான நடிப்பும், அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும் தான்.

குடும்பத்துடன்  பார்க்கக்கூடிய படமாக நடிகர் விஜய் படங்கள் கருதப்படுவது போல் தற்போது விஜய் சேதுபதியின் படங்களுக்கும் எல்லா  தரப்பு மக்களிடமிருந்தும் வரவேற்பு பெறுகிறது. ஏனென்றால் அவர் நடிக்கும் படங்களில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் அதீத கவர்ச்சியும் அதிக இரட்டை வசனங்களும் இருப்பதில்லை. தனக்குரிய பாணியில் மக்களின் மனதை வென்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் கால் பதிக்க விரும்பும் பல இளம் கதாநாயகர்களின் முன்னோடி என்று சொல்லும் அளவிற்கு இவரின் உழைப்பு அவர் நடக்கும் ஒவ்வொரு படத்திலும் தெரிகிறது . சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் மிக எளிமையாக இருக்கும் இவர், சாதாரணமான ஒரு வீட்டில் வாழ்ந்துகொண்டு, பிள்ளைகளையும் சக மக்களுடன் சமமாய் பழக கற்றுக்கொடுத்திறிருக்கிறார். யாருடைய விஷயங்களிலும் தலையிடாமல் தன்னுடைய வேலையைச் சரியாக செய்து, ஒரு நடிகராக ஹைட்ரொ கார்பன் பற்றியும், விவசாயத்தின் முக்கியத்தை பற்றி பல முறை பேசி மக்களிடம் விழிப்புணர்வு கொண்டு வந்துள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் நீயா நானாவில் மிடில் கிளாஸ் மாணர்வர்களைப் பற்றியும், அவர்கள் வாழக்கை எதிர்ப்பார்ப்புகள், சமூகம் அவர்களை எப்படி அங்கீகரிக்கிறது என்பதை பற்றிய அந்த நிகழ்ச்சியில் மிக அருமையாகப் பேசியுள்ளார். “ஆசிரியரிடம் நல்ல பேர் வாங்கறதுக்காக படிக்காத , அப்பா அம்மாகிட்ட நல்ல பேர் வாங்குறதுக்காக படிக்காத, உனக்காக படி. கால்ல அடி பட்டிருக்குன்னா ஸ்கூலுக்கு போகாத அவ்ளோ கஷ்டப்பட்டு படிக்கனுன்னு அவசியம் இல்லனு தான் நான் என் பசங்களுக்கு சொல்லிருக்கேன் ” என்று அவர் கூறினார்.

மேலும், “மிடில் கிளாஸ் மாணவர்களுக்கு  எப்பவுமே தன்னைவிட  உயர்வா இருக்கிறவங்களப் பார்த்து ஒரு ஏக்கம் இருக்கும், அந்த ஏக்கமே அவங்கள கீழ தள்ளிடும், அந்த ஏக்கத்தை விட்டு எப்போ அவங்க வெளிய வாரங்களோ அப்போ அவங்களால என்ன வேணாலும் செய்ய முடியும்” என்று பல அறிவுரைகளை வழங்கினார்.  எல்லாருக்கும் இவரைப் பிடிக்கறதுக்கு வேற என்ன காரணம் வேண்டும்?