அப்பா ‘ படத்திற்கு பிறகு எட்செட்ரா எண்டெர்டைன்மெண்ட் தயாரிக்கும் படம் ‘காதல் கசக்குதய்யா’  துருவா , வெண்பா, சார்லி, மறைந்த நடிகை கல்பனா , லிங்கா , ஜெயகணேஷ் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தை புதுமுக இயக்குனர் துவாரக் ராஜா இயக்கியுள்ளார் . போடா போடி’, ‘ நாய்கள் ஜாக்கிரதை ‘ படத்திற்கு இசையமைத்த தரண் இப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் .

24 நாட்களில் முழுப்படப்பிடிப்பும்  முடிவடைந்துள்ளது. பாலாஜி மோகன் , கார்த்திக் சுப்பாராஜ் , நலன் குமாரசாமி போன்ற இயக்குனர்களின் வரிசையில் துவாரக் ராஜாவும் குறும்படங்களில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார் . இயக்குனர் கூறுகையில் , காதல் கசக்குதய்யா, அதன் தலைப்பிற்கேற்ற ஒரு குதூகலமான Rom-Com Entertainer. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் ‘இது ஒரு வாயாடி படம்’. அதுமட்டுமில்லை பொதுவாக ‘Why this Kolaveri di?’ என்று காதலின் பெயரால் பெண்களை திட்டி கொண்டிருக்கும் காலக்கட்டத்தில், காதலை குறித்து பெண்களின் நிலைப்பாடு என்ன என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும் சித்தரிக்கிறது. இந்த படம் வருகின்ற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

இப்படத்தின் டிரைலரை  நடிகர் விஜய் சேதுபதி நேற்று வெளியிட்டார்.

Kadhal Kasakkudhaiya