தமிழ் திரையுலகில் கடின உழைப்பால் மட்டுமே உயர்ந்த இடத்தை பிடித்த நடிகர்களில் ஒருவர் விஜய்சேதுபதி. ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வரும் இவர் தனது நண்பர்களுக்காக அவ்வப்போது தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது அவர் பாடகராகவும் மாறியுள்ளார். விஜய்சேதுபதியை வசனம் பேச வைப்பதே இயக்குனர்களுக்கு பெரிய வேலையாக இருந்த நிலையில் யுவன்ஷங்கர் ராஜா ரிஸ்க் எடுத்து அவரை பாடவே வைத்துள்ளார்

யுவன்ஷங்கர் ராஜாவின் நெருங்கிய உறவினர் ஹரிகிருஷ்ண பாஸ்கர் நாயகனாக அறிமுகமாகும் ‘பேய்பசி’ என்ற படத்திற்காகத்தான் விஜய்சேதுபதி ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இந்த பாடல் வெற்றி பெற்றால் அவர் தொடர்ந்து பாடவும் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது