நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜீங்கா’
திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து வெளிவந்த ‘இமைக்கா நொடிகள்’ படத்தில்
கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

தற்போது ரஜினிக்கு வில்லனாக ‘பேட்ட’ திரைப்படத்திலும்
நடிக்கிறார். இதனைத் தொடர்ந்து, ’96, சீதக்காதி, செக்கச்
சிவந்த வானம், மாமனிதன்,சூப்பர் டீலக்ஸ், சைரா நரசிம்ஹா
ரெட்டி, இடம் பொருள் ஏவல் என அடுத்தடுத்து பல படங்களில்
பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணாவின்
இயக்கத்தில் புதிய படத்தில் விஜய்சேதுபதி நடிக்க
ஒப்பந்தமாகியுள்ளார். அறிமுக இயக்குநர் கிருஷ்ணா,
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக
இருந்தவர்.

இப்படத்தில் இசைக்கலைஞர் வேடத்தில் நடிக்கவுள்ளார்.
இதனால் கிட்டார், பியானோ வாசிக்க கற்றுவருவதாகவும்
தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இளவயது
வேடத்திலும் நடிக்கவுள்ளார். இதில் இரண்டு கதாநாயகிகள்
நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இன்னும் இப்படத்திற்கு பெயர் சூட்டப்படவில்லை.
வெகுவிரைவில் இப்படத்தை குறித்த அறிவிப்புகள்
வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் ‘செக்கச் சிவந்த வானம்’ ‘சீதக்காதி’
ஆகிய இரு படங்கள் விரைவில் திரைக்கு வர உள்ளன.