கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகிப் பிரம்மாண்ட வெற்றி பெற்ற படமாக அமைந்தது விக்ரம் வேதா. மாதவன் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் டைட்டிக் கேரக்டர்களில் நடித்தனர். இதில் விஜய் சேதுபதி நடித்த வேதா கதாபாத்திரம் மிக சிறப்பான வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து அந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி முயற்சி செய்து வந்தனர். முதலில் ஷாருக் கான் நடிப்பதாக இருந்து இப்போது அமீர்கான் வேதா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மாதவன் கதாபாத்திரத்தில் சாயிப் அலிகான் நடிக்க உள்ளார். தமிழில் தயாரித்த ஒய்னாட் ஸ்டூடியோஸ் நிறுவனமே இந்தியிலும் தயாரிக்கிறது.

அமீர்கான் நடிக்க இருக்கும் மற்றொடு ஹாலிவுட் படமான பாரஸ்ட் கம்ப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில்  நடிக்க நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.  இதற்காக சமீபத்தில் தமிழகம் வந்த அமீர்கான், பொள்ளாச்சியில் படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதியை சந்தித்து இதுகுறித்துப் பேசியுள்ளார்.