விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் இணைந்து நடித்து வெளிவரவிருக்கும் படம் ‘சீதக்காதி’. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணாம்’ புகழ் பாலாஜி தரணிதரன் இயக்க, இப்படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் மூன்றவாது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. விஜய்சேதுபதியின் 25வது படமான இதில் ‘ஐயா’ கதாபாத்திரத்தில் வயதான தோற்றத்தில் நடித்துள்ளார். இதில் படமானது வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வரவுள்ளதாக போஸ்டரில் வெளியிட்டுள்ளது.

இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்க, டிகே. சரஸ்கந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தினைத் தொடர்ந்து தியாகராஜன் குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ வெளிவர உள்ளது. இதில் திருநங்கையாக நடிக்கும் விஜய் சேதுபதியுடன், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.