விஜய்சேதுபதி யின் நடித்து வரும்  30-வது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது   .

 

நடிகர் விஜய்சேதுபதி தற்போது தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் ‘ சூப்பர் டீலக்கஸ்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சமந்தா , ரம்யா கிருஷ்ணன்,  மிஷ்கின், பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படம் வரும் 29 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கிறது.

அடுத்ததாக சீனுராமசாமியுடன் ‘மாமனிதன்’, அருண் குமாருடன் ‘சிந்துபாத்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.  அது மட்டுமில்லாமல் தெலுங்கில் சூப்பர் ஸ்டார் ’சிரஞ்சீவி’யுடன் ’சயிரா நரசிம்மா ரெட்டி’ பிரமாண்ட படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்புவின் ’வாலு’ படத்தை இயக்கிய விஜய் சந்தர் ,நடிகர் விஜய் சேதுபதியின் புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படம் விஜய் சேதுபதிக்கு 30-வது படமாகும். தற்போது  ‘சங்க தமிழன்’ என்று இப்படத்திற்கு பெயரிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.