விஜய் சேதுபதியின் அடுத்தப் படம்!


கதைகளத்திற்கு ஏற்ப படங்களைத் தேர்ந்தெடுத்து வெற்றி நாயகர்களில் ஒருவராக வலம் வரும் விஜய் சேதுபதியின் “விக்ரம் வேதா” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்த நடிக்கவுள்ள படத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் கோகுலின் இயக்கத்தில் அடுத்து, “ஜங்கா” என்ற படத்தில் தாதாவாக நடிக்கிறார் என்றும் இதன் படப்பிடிப்பு செப்டம்பர் மாத இறுதியில் தொடங்கவிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காமெடி படமான “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்திற்குப் பின்னர் விஜய்-கோகுல் கூட்டணியில் இது இரணடாவது படமாகும்.

படத்தின் நாயகியாக வனமகன் ஹீரோயின் சாயீஷா ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பாரிஸில் வளரும் பெண்ணாக நடிக்கிறார். ஆகவே இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பாரிஸில் படமெடுக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.