Vijay Sethupathi’s Sindhubaadh Teaser : ‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ படங்களுக்கு பிறகு விஜய் சேதுபதி, இயக்குநர் அருண் குமார் கைகோர்த்துள்ள 3-வது படம் ‘சிந்துபாத்’. இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக அஞ்சலி டூயட் பாடி ஆடியுள்ளார்.

‘கே புரொடக்ஷன்ஸ் – வான்சன் மூவீஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தற்போது, இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.