சமீபத்தில் விஜய்யின் சர்கார் பட போஸ்டர் குறித்து சர்ச்சை எழுந்தது விஜய் எதற்கு இப்படி சிகரெட்டை ஸ்டைலாக வைத்துக்கொண்டு போஸ் கொடுக்கிறார் என பாமகவின் அன்புமணி ராமதாஸ் உட்பட பலர் கேள்வி எழுப்பினர்.

சுகாதாரத்துறை அந்த போஸ்டருக்கு தடைவிதித்தது உயர்நீதிமன்றமும் இப்போஸ்டரை கண்டித்தது. இதனால் இப்பட போஸ்டர் பட நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டது.

இதற்குச் சினிமா கலைஞர்கள் யாரும் ஆதரவு கொடுக்கவில்லை சிம்பு,டி.ஆர் போன்றோர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் விழா ஒன்றில் பேசிய விஜய் சேதுபதி சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடிப்பதற்காக நடிகர்களை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள். அதற்கு பதிலாக நீங்கள் சிகரெட் தயாரிக்கும் நிறுவனத்திற்கு எதிராக அல்லவா குரல் கொடுத்து அதை மூட வேண்டும் என்று கூறியிருக்கிறார்.