தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை கொண்டவர் விஜய். அடுத்த சூப்பர்ஸ்டார் என்று அனைவராலும் கொண்டாடப்படும் விஜய்க்கு ஒரு மகன், மகள் உண்டு. திரையுலகை பொறுத்தவரை நடிகர்களின் வாரிசுகள் கண்டிப்பாக அடுத்து திரையுலகிற்கு வருவார்கள். விஜய் மகனும் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்தார். அதன்பின் அவரை பற்றிய செய்திகள் இல்லை.

இந்த நிலையில் விஜய் மகன் சஞ்சய் ஜங்சன் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் இன்று வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக உள்ளது.