நம்தமிழ் மக்கள் உலக நாடு அனைத்து பகுதிகளிலும் வாழ்ந்து வருகின்றனா். தமிழ் நெஞ்சங்களை மகிழ்விக்கும் வகையில் அவ்வப்போது அந்த நாடுகளில் நம் சினிமா பிரபலங்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றனா். இந்நிலையில் விஜய் நட்சத்திரங்கள் லண்டனில் ஒரு நிகழ்ச்சியை நிகழ்த்தியது. அந்த விஜய் ஸ்டார்ஸ் கொண்டாட்டம் தற்போது ஒளிப்பரப்பாக உள்ளது. வருகிற பிப்ரவரி 18 ஞாயறு அன்று மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது.

இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் நம்ம பேவரைட் சீரியல் ஜோடியான ராஜா ராணி ஆலியா மானசா, சஞ்சீவ் நடனமாடி அசத்தியுள்ளனா். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஹரிஷ் கல்யாண், ஆரவ், பிந்து மாதவி இவா்களும் இதில் பங்கேற்றுள்ளனா். சரவணன் மீனாட்சி புகழ் ரக்ஷிதா இந்த கொண்டாட்டத்தில் கலக்கல் நடனத்தை ஆடி மகிழ்விக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியை மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்குகிறார்.

மேலும் சூப்பர் சிங்கா் நட்சத்திரங்கள் சௌந்தர்யா, ஸ்ரீனிவாஸ்,திவாகா், மாளவிகா, பிரகதி மற்றும் சத்யா பிரகாஷ் உள்ளிட்டவா்களின் இசை நிகழ்ச்சியம் நடைபெறுகிறது.