நாசர் மகனுக்கு ஆறுதல் சொன்ன இளையதளபதி

இளையதளபதி மிகச்சிறந்த மனிதர் மட்டுமின்றி சிறந்த மனிதாபிமானம் மிக்கவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பிரபல குணச்சித்திர நடிகரும், நடிகர் சங்க தலைவருமான நாசர் வீட்டிற்கு விஜய் நேற்று திடீரென சென்றார்

கடந்த 2014ஆம் ஆண்டு சாலை விபத்து ஒன்றில் சிக்கி குணமாகி வரும் நாசரின் மகன் ஃபைசலை சந்தித்த விஜய், அவரிடம் உடல்நலன் விசாரித்ததோடு அவருடன் இணைந்து செல்பி எடுத்து கொண்டார்

இதுகுறித்து நாசர் கூறியபோது, ‘எனது மகன் விஜய்யின் தீவிர ரசிகர். இதனையறிந்த விஜய் என்னுடைய வீட்டிற்கு வந்ததோடு அவருடன் செல்பியும் எடுத்து கொண்டது எனக்கு பெருமையாக உள்ளது’ என்று கூறியுள்ளார்

மேலும் விஜய்யும் நாசரும் இணைந்து ‘தமிழன்’, ‘வசீகரா’, ‘சுக்ரன்’, ’ஆதி’, ‘தலைவா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.