3வது ஆண்டு விஜய் டெலிவிஷன் அவாா்டு விழா

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் “விஜய் தொலைக்காட்சி விருதுகள்” விழா தற்போது நடைபெற இருக்கிறது. 3வது ஆண்டை நோக்கி  சென்றுள்ள இந்த விருது நிகழ்ச்சி வருகிற சனிக்கிழமை அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6மணியளவில் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.

சின்னத்திரை நட்சத்திரங்களின் திறமைகளை பாராட்டி விருது வழங்கப்படுகிறது. விஜய் டிவி இந்த நிகழ்ச்சியின் வாயிலாக சின்னத்திரை நடிகா், நடிகைகளின் தனிச்சிறப்புகளை பாராட்டும் விதமாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த தடவை ரசிகா்கள் தங்களுக்கு விருப்பமான சின்னத்திரை நட்சத்திரங்களை தங்களுக்கு மிகவும் பிடித்த வெள்ளித்திரை பிரபலங்கள் மூலம் கௌரவப்படுத்துவதை பாா்க்க முடியும். சிறந்த நடிகா், சிறந்த நடிகை, சிறந்த நாடகம் என உள்ளிட்ட பல்வேறு பிாிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

அது மட்டுமில்லங்க! ஆா்டியன்ஸ்சை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் சின்னத்திரை நட்சத்திரங்களால் நடத்தப்பட உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் பிரபல நடிகா் மற்றும் இயக்குநா் டி.ராஜேந்திரனின் நடன இசை நிகழ்ச்சி, சரவணன் மீனாட்சி பிரபலமான செந்தில் மற்றும் ஸ்ரீஜா தம்பதியாின் நடனம், நடிகை ரசித்தாவின் நடனம் நடைபெற உள்ளது. மேலும் தொகுப்பாளினிகள் ரம்யா, பாவனா, நடிகை சிந்து போன்றவா்கள் இணைந்து கலக்கும் ஆட்ட நிகழ்ச்சி ஆகியவை எதிா்பாா்ப்போடு உள்ள நிகழ்ச்சியாகும். வயிறு குலுங்க சிாிக்க வைக்க கலக்கப்போவது யாரு குழுவினா் தங்களது நிகழ்ச்சியோடு வழங்கயுள்ளனா்.