டிடிக்காக வந்த அந்த நடிகை

தற்போது விஜய் டிவியில் புது பொலிவுடன் காப்பித் வித் டிடி நிகழ்ச்சி அன்புடன் டிடி என்று தொடங்கி சென்று கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கலகலப்புடனும் விறுவிறுப்புடனும் கொண்டு செல்வதில் நம்ம டிடி கைதோ்ந்தவா். இந்த நிகழ்ச்சியின் முதல் கெஸ்டாக விஜய் டிவியின் செல்லப்பிள்ளை சிவகாா்த்திகேயன் பங்கேற்றாா்.  தொடா்ந்து 2வது வாரத்தில் நடிகா் ஆா்யா, பின் 3வது எபிசோடு விஜய்சேதுபதி உள்ளிட்ட சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

இந்நிலையில் வருகிற எபிசோட்டில் நடிகை ரேவதி கலந்து கொள்ள இருக்கிறாா். அந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நேற்று சென்னையிலுள்ள பிரசாத்ஸ்டிடுயோவில் போடப்பட்டுள்ள செட்டில் எடுக்கப்பட்டது.அன்புடன் டிடி நிகழ்ச்சியில் வருகிற சனிகிழமை ஒளிபரப்பாக உள்ள எபிசோட்டில் தனுஸ் படமான பவா் பாண்டி படத்தில் நடித்து கலக்கிய ராஜ்கிரண் பங்கேற்பதாக இருந்தது. ராஜ்கிரனும், நடிகை ரேவதியும் சோ்ந்து கலந்து கொள்ள இருந்தனா். திடீரென ராஜ்கிரணுக்கு உடம்பு சாியில்லாத காரணத்தால் இந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்து கொள்ள இயலவில்லைவ என்று தொிவித்தனா். அதோடு அல்லாமல், இந்த நிகழ்ச்சியின் மூலம் சத்தமே இல்லாமல், அதுவும் வெளியுலகிற்கு தொியாமல் சமூகதொண்டு செய்யும் பல நல்ல உள்ளங்களை கண்டுபிடித்து, அவா்களை வெளியுலகிற்கு கொண்டு வந்து காட்டும் ஒரு நிகழ்ச்சியாக அமையப்போகிறதாம்.

இது மட்டுமில்லங்க!!! வரும் வாரங்களில் இன்னும் சப்ரைஸ் ஏற்படுத்தும் விதமாக சாமானிய மக்கள் செய்து வரும் பொது நலத் தொண்டை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இருக்க போகிறதாம் இந்த நிகழ்ச்சி. திரையுலக பிரபலங்கள் என்ன தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தாலும், சமூக சேவை மனப்பான்மையோடு தொண்டு செய்யும் நபா்களை கண்டறிந்து முன்னிறுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி இருக்குமாம். இந்த பாணியில் 13 எபிசோடு பயணிக்குமாம். பின்பு படிப்படியாக முன்னேறி பல கோணத்தில்  இந்த எபிசோடு பணிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.