தமிழ் திரையுலகில் கால்பதித்த சின்னத்திரை தொகுப்பாளினி!

04:04 மணி

சின்னத்திரையில் பிரபலமானவர்கள் பெரிய திரைக்கு வருவது வழக்கமான ஒன்றுதான். அதேநேரத்தில், சின்னத்திரையில் தொகுப்பாளர்களாக, போட்டியாளராக இருந்து பிரபலமாகி பின்னர் பெரிய திரையில் பிரகாசித்தவர்களும் இங்கே ஏராளம். குறிப்பாக, சந்தானம், சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், மா.கா.பா.ஆனந்த், ரம்யா, பிரியதர்சினி (டிடி) என இவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

இவர்கள் வரிசையில் தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளினியாக பணியாற்றிய ஜாக்குலின் தற்போது பெரிய திரையில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுவும், லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுடன். நயன்தாரா நடித்துவரும் ‘கோலமாவு கோகிலா’ என்ற படத்தில் அவருக்கு தோழியாக ஜாக்குலின் நடித்து வருகிறாராம்.

சின்னத்திரையில் ஜாக்குலினுக்கு கிடைத்த வரவேற்பு பெரிய திரையிலும் கிடைக்கும் என நம்பலாம்.

(Visited 34 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com