கலக்கப்போவது யாரு என்ற விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தவர் பாலா பாண்டிச்சேரி மாநிலம் காரைக்கால் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர். மிகவும் ஒல்லியாக இருந்தாலும் கில்லியாக காமெடி செய்வதில் வல்லவர்.

சின்னத்திரையில் ஏற்கனவே முத்திரை பதித்த கலக்கபோவது யாரு அமுதவாணன் மூலமாக இந்த கலக்கபோவது யாரு நிகழ்ச்சிக்கு வந்தவர் அந்த நிகழ்ச்சி மூலம் புகழடைந்தார். இதனால் விஜய் சேதுபதி நடிக்கும் ஜூங்கா படத்தில் சோலோவாக காமெடி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

விஜய் சேதுபதியின் ரசிகனாக இருந்த நான் குறுகிய காலத்தில் அவர் படத்திலேயே காமெடியனாக நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.