விஜய் டிவியின் நட்சத்திர தொகுப்பாளினியாக இருக்கும் திவ்யதர்ஷினி இவரின் கலகல பேச்சால் அனைவரின் மனதையும் கொள்ளை அடித்தவர்.

இவர் சுபயாத்ரா என்னும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் ஜூலி கணபதி, நளதமயந்தி, விசில் மற்றும் சரோஜா என சில படங்களில் நடித்து வந்தவர்.

தற்போது தனுஷ் முதன்முறையாக இயக்கி வரும் படம் பவர் பாண்டி. இதில் ராஜ்கிரண் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் கெஸ்ட் ரோலில் டைரக்டர் கௌதம்மேனன், தனுஷ் மற்றும் திவ்யதர்ஷினி நடிக்கின்றன. மேலும் பிரசன்னா, நதியா. சாயா சிங் மற்றும் ரோபோ சங்கர் பலர் முக்கிய வேடங்களில் நடிகிறார்கள்.
இதை தொடந்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜுய் டிவி திவ்யதர்ஷினி நடித்த காட்சி படமாக்கியதாகவும் அதில் அவர் சிறப்பாக நடித்ததாகவும் கூறியிருந்தார். மேலும் திவ்யதர்ஷினியை தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதனால் வெள்ளித்திரையில் நடிக்க ஆசை வந்திருப்பதாகவும் கதாநாயகியாக இல்லாமல் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.