திருமதி திவ்யதர்ஷினி செல்வி திவ்யதர்ஷினி ஆன கதை

விஜய்டிவி தொகுப்பாளா்களில் மிகவும் பிரசித்தி பெற்றவா் நம்ம டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். இவருடைய கலகலப்பான பேச்சாலும், சிாிப்பாலும் அனைத்து ரசிகா்கள் மனதிலும் நீங்காத இடம் பெற்று இருப்பவா். அதுவும் காப்பி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் அதிகமாக பேசப்பட்டாா். தற்போது காப்பி வித் டிடி அன்புடன் டிடி நிகழ்ச்சியாக புது பொலிவுடன் ஜொலித்து வருகிறாா். இவருக்கென்று ஒரு ரசிக பட்டாளமே இருக்கிறது. சின்னத்திரை மட்டுமின்றி பொியத் திரையிலும் தற்போது சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறாா்.

டிடி சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரையிலும் தற்போது கொடி கட்டி பறக்க ஆரம்பித்து விட்டாா். இவா் தனுஸ் இயக்கத்தில் பவா் பாண்டி படத்தில் நடித்திருந்தாா். அந்த படத்தில் தன் பெயருக்கு முன்னால் செல்வி திவ்யதா்ஷினி என்று குறிப்பிட்டு இருந்தனா். இதைப்பற்றி வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து எந்தவித பதிலும் தொிவிக்காத இருந்தாா் டிடி.

ஆனால் தற்போது இந்த கேள்வியை முன்னணி ஆங்கில செய்திதாள் கேட்டுள்ளது. இந்த செய்தியை கேள்விப்பட்ட டிடி, உடனே கோபம் அடைந்து, தயவு செய்து, இதை பற்றி யாரும் கேட்கவேண்டாம் .. ப்ளீஸ் என்று சற்று கோபமாக பதில் அளித்துள்ளாா். அப்படி என்ன தான் பிரச்சனை இருக்கும் என்று தொியல. வாழ்க்கையில் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு அப்படி என்ன சோகத்தை மறைத்து வைத்திருக்கிறாா் டிடி என்கிற திவ்யதா்ஷினி. பொறுத்திருந்து பாா்ப்போம். ஏன் திருமதி டிடி செல்வி டிடி ஆன கதை என்று தொியவில்லை.