காற்று வெளியிட, தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை அடுத்து நடிகர் கார்த்தி முற்றிலும் வித்தியாசமாக கிராமிய மணத்துடன் கூடிய கேரக்டர் ஒன்றில் நடித்த படம் தான் ‘கடைக்குட்டி சிங்கம். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளின் வியாபாரம் முடிந்துவிட்டது.

இதையும் படிங்க பாஸ்-  நடிகர் கார்த்தி செய்த வித்தியாசமான சாதனை! இதுதானா...

கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி கோடிகளில் பணம் கொடுத்து பெற்றுள்ளது. அதேபோல் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை மிகப்பெரிய தொகையை கொடுத்து அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கார்த்தி ஜோடியாக ‘வனமகள்’ நாயகி சாயிஷா நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு நாயகியாக பிரியா பவானிசங்கர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பானுப்ரியா, பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்துள்ளனர். பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். முதன்முதலாக சகோதரர் கார்த்தி நடிக்கும் படத்தை நடிகர் சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார்.