எனது கணவர் இறக்கவில்லை – கதறும் ‘மைனா’ நந்தினி

04:42 மணி

தனது கணவர் கார்த்திக் இன்னும் இறக்கவில்லை எனவும், இன்னமும் அவரை நான் நேசித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என விஜய் டிவி புகழ் மைனா நந்தினி கூறியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் வெளிவந்த சரவணன் மீனாட்சி தொடரில் மைனாவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமான நந்தினியின் கணவர் கார்த்திகேயன் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். திருமணம் ஆகி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், இந்த விவகாரம் சின்னத்திரையினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஒரு வார இதழுக்கு நந்தினி அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கார்த்திக்கை நானனும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.  அரசாங்க வேலை வாங்கித் தருவதாக பலரிடம் 80 லட்சத்திற்கும் மேல் அவர் பணம் வாங்கியிருந்தார் என்பது எனக்கு பிறகுதான் தெரிய வந்தது. ஏன் இப்படி செய்தாய்? என நான் கேட்டால், தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார். ஆனால் கூறியபடி, அவர்கள் யாருக்கும் அவர் வேலை வாங்கித் தரவில்லை. எனவே, அவர்கள் அவருக்கு பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். எனவே, அவர் தீவிர மன உளைச்சளில் இருந்தர்.

எனக்கு நகை வாங்கி தருவதாக கூறி என்னிடமிருந்து ரு.20 லட்சம் வரை கார்த்திக் பணம் வாங்கினார். ஆனால், எந்த நகையையும் அவர் வாங்கித் தரவில்லை. அதுபோக, இரவும் பகலும் கஷ்டப்பட்டு உழைத்த பணம் அனைத்தையும் அவரிடமே கொடுத்தேன். மேலும், இன்னொரு பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்ததும், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டதும் எனக்கு தெரிய வந்தது. எனவே, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எனவே, என் குடும்பத்தினர் அவரிடமிருந்து என்னை பிரித்து எனது வீட்டிற்கே கூட்டி சென்று விட்டனர். இருந்தாலும், அவரை நான் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறேன். அதனால்தான் அவரை சந்தித்து எல்லா பிரச்சனைகளையும் முடித்து விட்டு வா. நான்  மீண்டும் இணைந்து வாழ்வோம் எனக் கூறியிருந்தேன்.

ஆனால் இப்படி தற்கொலை செய்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த செய்தி கேள்விபட்டதும், வழக்கம் போல் பயமுறுத்துகிறார் என நினைத்துதான் சென்றேன். ஆனால், அவர் இப்படி செய்துவிட்டார். அவரை நான் உண்மையாக நேசித்தேன். ஆனால், அவர் எனக்கு உண்மையாக இல்லை. அவரது உடலை பார்க்கும் சக்தி எனக்கில்லை.

என் கணவர் பற்றி யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டேன். ஆனால், தற்போது அவரைப் பற்றி எல்லாவற்றையும் வெளியே கூறும்படி அவர் செய்து விட்டார்” என கூறி நந்தினி கதறி அழுதுள்ளார்.

The following two tabs change content below.
நெல்லை நேசன்

நெல்லை நேசன்

இவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com