தாஜ்மகால் உள்ளே விட மறுத்த காவலர்- சண்டையிட்ட டிடி

விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருப்பவர் டிடி. இவருக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டம் உண்டு. சின்னத்திரை மட்டுமின்றி பெரியத்திரையிலும் சிறு வேடங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியபோது,

ஒரு முறை தாஜ்மகாலை சுற்றி பார்க்க சென்றேன். அப்பொழுது வெயில் அதிகமாக இருந்ததால், எனது உடல் சிவந்து விட்டது. எனவே அங்கிருந்த காவலாளி என்னை வெளிநாட்டினர் என நினைத்து எனது பாஸ்போர்டை கேட்டார். பாஸ்போர்ட் எதற்கு? அதுதான் நுழைவு சீட்டு வாங்கியிருக்கிறேனே என்று காவலாளியிடம் கேட்டேன். ஆனாலும் என்னை உள்ளே விட மறுத்தார் அந்த காவலாளி. மேலும் நீங்கள் ரூ.2500 கட்டி விட்டு வாருங்கள் என்றார். தொடர்ந்து ஹிந்தியிலேயே பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஹிந்தி தெரியாததால் நான் ஆங்கிலத்தில் பேசினேன். ஆனால் ஆங்கிலம் அவருக்கு புரியவில்லை. எனக்கு ஹிந்தி தெரியாது என்றேன். ஹிந்தி தெரியாது என்றால் பின் எப்படி இந்தியன் என என்னிடம் கேட்டார். உனக்கு எப்படி தமிழ் தெரியாதோ அதுபோல் எனக்கு ஹிந்தி தெரியாது என அவரிடம் சண்டை போட்டேன். நான் தமிழ்நாட்டை சேர்ந்தவள் என்றும் கூறினேன். நீண்ட் நேர போராட்டத்திற்கு பின்பே காவலாளி என்னை உள்ளே விட்டார் என்று கூறினார்.