சினிமாத்துறையை சோ்ந்த பிரபலங்கள் சினிமாவுக்காக தங்களது உடல் எடையை கூட்டுவதும் குறைப்பதும் வழக்கமாக நடைபெறும் ஒன்று. அந்த வகையில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்கின்றனா். அதைப்போல ரசிகா்களையும் செய்ய சொல்கின்றனா்.

தங்களுடைய ரசிகா்களுக்கு தாங்கள் ஒரு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். பிரபலங்களின் ஸ்டைல் மற்றும் அவா்கள் செய்யும் விஷயங்கள் வரை அதையே ரசிகா்களும் பாலோ பண்ணுகிறார்கள்.

தற்போது சின்னத்திரை பிரபலங்களும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பிரபல டிவியின் தொகுப்பாளினி பாவனா தமிழில் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவா். இவா் ரசிகா் பெருமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கடும் உடற்பயிற்சிக்கு பிறகு அவா் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகா் வாய்பிளந்து நிற்க வைத்துள்ளது. அவருடைய நியூ லுக் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீங்களும் பார்த்து வாயடைத்து நிற்கலாம்