இளையதளபதி விஜய் குறித்த அரிய தகவல்களுடன் இரண்டு புத்தகங்கள் விற்பனைக்கு இன்று முதல் வெளியாகியுள்ளது. The Icon of Millions” என்ற ஆங்கில புத்தகம், மற்றும் ‘கோடிக்கணக்கான மக்களின் அடையாளம்’ என்ற தமிழ் புத்தகம் ஆகிய இரண்டு புத்தகங்கள் இன்று வெளியாகியுள்ளது.

இந்த புத்தகத்தை நீதிபதி டேவிட் அன்னுசாமி என்பவர் வெளியிட அவற்றை பிரபல எழுத்தாளர் பசுபதி ராஜன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் ஏராளமான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த புத்தகங்கள் அளவில் சிறியவையாக இருந்தாலும், மாஸ் ஹீரோ விஜய் குறித்த பல அரிய தகவல்கள் உள்ளதாகவும், ஒவ்வொரு விஜய் ரசிகருக்கும் இந்த புத்தகம் ஒரு பொக்கிஷமாக இருக்கும் என்றும் இந்த புத்தகங்களை வெளியிட்ட நீதிபதி டேவிட் அன்னுசாமி கூறியுள்ளார்.