விஜய் மொ்சல் படத்திற்கு பிறகு முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார். விஜய் முருகதாஸ் வெற்றி கூட்டணி இணையும் மூன்றாவது படம். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கிறார். பைரவா படத்திற்கு பிறகு விஜய்யுடன் மீண்டும் ஜோடி சோ்ந்துள்ளார் கீா்த்தி சுரேஷ்.

சன் பிக்சா்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு, ஏ.ஆா்.ரஹ்மான் இசையமைக்கிறார். மொ்சல் படத்திற்கு இவர் தான் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் காமெடி நடிகா் யோகி பாபு நடித்துள்ளார்.இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட திட்டமிள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த பிசியான படப்பிடிப்புக்கிடையில் இளையதளபதி விஜய் தனது மகள் திவ்யா சாஷா அமெரிக்காவில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டில் பங்கேற்றதை நேரில் சென்று ரசித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.