காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி நேற்று சட்டசபையில் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறி அவரை அவைக்காவலர்களை கொண்டு வெளியேற்றினார் சபாநாயகர் தனபால்.

இதனையடுத்து சட்டசபையில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளித்தார் விஜயதரணி. அப்போது அவர் சபாநாயகர் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்தார். தனது கோரிக்கை குறித்து நேரமில்லா நேரத்தில் தீர்மானம் கொண்டு வர அனுமதி கேட்டார். ஆனால் அதற்கு அனுமதி மறுத்த சபாநாயகர் அவைக்காவலர்கள் மூலம் அவரை வெளியேற்ற உத்தரவிட்டார்.

அவைக்காவலர்கள், முறைகேடாக உடம்பில் அடிபடக்கூடிய அளவுக்கு கையில், வயிற்றில், நெஞ்சில் கைவைத்து, புடவையைப் பிடித்து இழுத்து அநாகரிகமான முறையில் வெளியேற்றியுள்ளனர் என்றார் விஜயதரணி. மேலும் ஒரு பெண் எம்எல்ஏ என்றும் பாராமல் மிக மோசமாக நடந்துகொண்டுள்ளனர். சட்டப்பேரவைத் தலைவராக இயங்குவதற்கு லாயக்கற்ற ஒரு நபராக சபாநாயகர் தனபால் இருந்து கொண்டிருக்கிறார் என்றார் ஆவேசமாக.