1. கன்னியாகுமரியில் மின்சாரம் தாக்கி மூன்று பேர் இறந்த சம்பவம் குறித்து சட்டசபையில் பேச அனுமதியளிக்க கோரிக்கை வைத்தார் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி. ஆனால் இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்துவிட்டார். ஆனாலும் தொடர்ந்து விஜயதரணி கேள்வி எழுப்பிக்கொண்டே இருந்தார்.

இதனையடுத்து சபை நடவடிக்கைகளுக்கு விஜயதரணி குந்தகம் விளைவிப்பதாக கூறி அவரை அவைக்காவலர்களை கொண்டு வெளியேற்றினார் சபாநாயகர். இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜயதரணி சபாநாயகர் தனபால் தன்னை இழிவாக பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இதையும் படிங்க பாஸ்-  கமல் வந்தால் நல்லாயிருக்கும்ன்னு சொன்னேன்: திருநாவுக்கரசர்

சபாநாயகர் என்னைப் பார்த்து, நீங்களும் அமைச்சரும் தனியாகப் பேசிக் கொண்டீர்களா? என்றெல்லாம் கேட்கிறார். ஒரு பெண் எம்எல்ஏவை பார்த்து சபாநாயகர் கேட்கிற கேள்வியா இது? நல்ல குடும்பத்திலிருந்து மக்களுக்காக போராட்டம் நடத்த நாங்கள் வந்துள்ளோம். என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  அமைதியா ரெஸ்ட் எடுக்க விடுங்க – புலம்பிய காயத்ரி !

இப்படி அசிங்கப்பட்டு நாங்கள் இந்த அவையில் செயல்பட வேண்டுமா? தனியாகப் பேசிக்கொள்கிறீர்களா என அவமானப்படுத்துவது வேறு யாரும் அல்ல சபாநாயகர்தான். என்னைப் பற்றி பேசியதற்கு சபாநாயகர் பொறுப்பேற்க வேண்டும் என்றார். மேலும் தனது நெஞ்சில் கைவைத்து புடவையை பிடித்து இழுத்து அநாகரிகமாக வெளியேற்றியதாக கூறினார் விஜயதரணி.