விஜயகாந்த் மட்டுமே என் நண்பர்;கமலும், ரஜினியும் அல்ல-சரத்குமார்

திரையுலகில் விஜயகாந்த் மட்டுமே என் நண்பர் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

புலன்விசாரணை படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகர் சரத்குமார். திரையுலகில் முன்னணி இடத்தை பிடித்தவ்ர் தற்போது அரசியலிலும் கலக்கி வருகிறார்.

இந்த நிலையில் அவரது கட்சி துணை பொதுச் செயலாளர் சுந்தர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்று பேசினார். அப்போது அரசியலிலும் சை, கலைத்துறையிலும் சரி விஜயகாந்த் மட்டுமே எனக்கு நண்பர். நான் கஷ்டப்பட்ட நேரத்தில் உதவியவர். கமலும், ரஜினியும் என் நண்பர்கள் அல்ல, கலைத்துறையில் பயணிப்பவர்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் இறைவன் நினைத்தால் விஜயகாந்துடன் இணைந்து செயல்படுவோம் என்று கூறினார்.