Vijayakanth : பிரதமர் மோடி கலந்து கொள்ளும் மாநாட்டில் விஜயகாந்த் கலந்து கொள்வாரா என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்பது உறுதியாகிவிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் அக்கட்சி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பி.எஸ், ஜெயக்குமார் உள்ளிட்ட சில அமைச்சர்கள் நேற்று விஜயகாந்தை சந்தித்து பேசினர். அப்போது, பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்பட்டது. அதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ் “சென்னைக்கு அருகேயுள்ள வண்டலூரில் 6ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்வார்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க பாஸ்-  இந்தியாவுக்கு மோடி.. தமிழ்நாட்டுக்கு ஸ்டாலின் – வெளியானது அடுத்த கருத்துக்கணிப்பு !

இதைத்தொடர்ந்து, வண்டலூர் பகுதியில் அதிமுக, பாஜக மற்றும் தேமுதிக கொடிகள் நடப்பட்டிருந்தன. ஆனால், கூட்டணி இன்னும் உறுதியாகாத நிலையில், தேமுதிக கொடி இருப்பது நல்லதல்ல என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில், தற்போது தேமுதிக கொடிகள் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல், மோடி பேசும் மேடையிலும் விஜயகாந்தின் படம் இல்லை. எனவே, அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா? மோடி கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்வரா என்பதில் ஐயம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  இங்க எடப்பாடி பழனிச்சாமி.. அங்க மோடி.. அப்டியே கண்டினியூ

கூட்டணி குறித்து விஜயகாந்த் தேமுதிக நிர்வாகிகளிடம் இன்று காலை ஆலோசனை செய்யவுள்ளார். அதன் பின் அவரின் முடிவை செய்தியாளர்களுக்கு அறிவிப்பார் எனத் தெரிகிறது.